நேதாஜி ரோட் நினைவுகள் – XXV – க்ரிக்கெட் பகுதி 2

Friends

சுதாகர் மேட்ச் என்று அவன் விளையாடவில்லை. தெருவைப் பொறுத்தவரை பெஸ்ட் பொளலர். Off cutters specialist. அதற்கு ஏதுவாக ரோடு end இருக்கும். பந்து ரோடு முனையில் பட்டு படாரென்று நல்ல வேகத்தில் திரும்பும். Maximum clean bowled wickets தான். மிகவும் சாது. அவனுடைய திறமை மேல் அவனுக்குக் கர்வமே கிடையாது. பேட்டிங்கிலும் சுமாராக ரன்கள் அடிப்பான். சீனியர்களை எதிர்த்துப் பேச மாட்டான். தனிப் பிறவி. க்ரிக்கெட் மட்டுமில்லாமல் எல்லா விளையாட்டுகளையும் நன்றாக விளையாடுவான். படிப்பிலும் கெட்டிக் காரன். Unsung hero. படித்து முடித்து நல்ல வேலையிலும் அமர்ந்தான். நன்றாக சம்பாதித்தான். இப்படி எல்லாத் திறமைகளையும் கொண்ட சுதாகர் வெகு சீக்கிரமே இறைவனடி சேர்ந்து விட்டான்.

ஜீ.முரளி இரண்டு கால்களையும் பேட் தான் தாங்கிக் கொள்கிறதோ என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு அவனுடைய stance. நமக்கு senior. க்ரிக்கெட் பாலில் ரங்கநகருக்கு எதிராக மேட்ச் ஜெயித்து சாதனை செய்த முதல் player. குமார் தங்கத்தின் challengeஆல் ரங்க நகர் டீமுடன் மோதி நடு மேட்சில் padsகளைக் கழற்றி girls hischoolலில் விழும் அளவுக்கு sixer அடித்த பெருமை ஜீ.முவையே சேரும். நல்ல காப்டன். Good wicket keeper. எல்லாரையும் அரவணைத்துப் போகும் தன்மை உள்ளவன். Team Spirit Person.

சதாசிவம் ஜீமு வயது, எங்களை விட 3 வருடங்களே பெரியவர் ஆனாலும், நல்ல ஆகிருதியான தோற்றம், வயதைக் கூடக் காட்டும். ஜீ.முவும் சதாசிவமும் க்ளாஸ்மேட் என்றால் கொஞ்சம் நம்புவது கடினம். சதாசிவம் மனசுக்குள் படிக்கும் வழக்கம் இல்லாதவர். வாய் விட்டுத் தான்படிப்பார், அதுவும் நல்ல சத்தத்தோடு. மிக வேகமாகப் படிப்பார். டப்பாவில் கூழாங்கற்களைப் போட்டுக் குலுக்கினால் வரும் சத்தம் போலப் படிப்பார். ஆனால் நல்ல படிப்பாளி. தெருவிலே முதலில் C.A. பாஸ் பண்ண பெருமை சதாசிவத்தையேச் சேரும்.

க்ரிக்கெட்டில் அவருடைய stance வித்தியாசமானது. கைலியை மடிக்கிக் கட்டி விடுவார். முட்டிகள் இரண்டும் உராயும். bat and pad gap இருக்கும். யாராவது bat and pad gap இல் பந்து போட்டால் அவ்வளவு தான். பந்து பறக்கும். Straight boundary. திருவானைக்காவலுடன் match ஆடும் போது இது பல முறை கை கொடுத்துள்ளது.

சங்கரன் வேண்டுமென்றே opposite team bowler களிடம் அவர்கள் காதில் விழும் தூரத்தில் நின்று கொண்டு ‘ஐயோ அவர் கால் gap இல் பந்து போட்டால் அவுட்டாகி விடுவார்’ என்று சொல்லுவான். இந்த technique ஆல் சதாசிவம் குறைந்த பட்சம் ஒவ்வொரு மாட்சிலும் 30 ரன்கள் எடுத்து விடுவார்.

சதாசிவம் bowling ஒரு மாதிரி ஓடி வந்து சுஜாதா பாஷையில் குன்சாவாக leg spin போடுவார். நாலே step தான். இரண்டு கைகளும் மேல் நோக்கி வரும். கடைசி சமயத்தில் வலது கை மேல் நோக்கி வந்து ஒரு சுழன்று சுழன்று விழுந்து leg spin ஆக உருவெடுக்கும். ஒரு matchல் ஜெசுவையும் என்னையும் போட்டு batsman பின்னி எடுத்தான். ஜெ.சு மிகவும் கடுப்பானான். ஆனாலும் ரன்கள் குறைந்த பாடில்லை. ரவி திடீரென்று நடு matchஇல் ‘I resign my captaincy’ என்று சொல்லி விட்டு ஸ்ரீகாந்த்தைக் காப்டன் ஆக்கினான். ஸ்ரீகாந்த் உடனே எனக்கும் ஜெ.சுக்கும் ஓவர்களைக் கட் பண்ணி விட்டு சதாசிவம் மற்றும் பாலாவிடம் bowling ஐ ஒப்படைத்தான். சதாடசிவம் 4 விக்கெட்டுகளையும் பாலா 6 விக்கெட்டுகளயும் வீழ்த்தி ஜெயிக்க வைத்தனர்.  ஜெசு ஒத்துக் கொள்ளவில்லை, காக்கா உட்கார பனம்பழம் என்றான்.

என்னை நிறைய தடவை cricket ல் encourage பண்ணியிருக்கிறார். ‘யார் எது சொன்னாலும் காதில் வாங்காதே, உன்னுடைய திறமையில் கவனம் செலுத்து’ என்று கூறியிருக்கிறார்.

மொத்தத்தில் சதாசிவம் ஒரு நல்ல மனுஷன்.

குமார் தங்கம் பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை.  குமார் பேட்டிங்க்கு வந்தால் எல்லோரும் பௌலிங் போடா ஆசைப் படுவார்கள்.  யார் பந்து வீசினாலும் அதிகப் பட்சம் மூன்று பால்கள் கூடத் தாங்க மாட்டான்.  பந்தை நேராக ஸ்டம்புகளை நோக்கிப் போட்டால் ஒன்று க்ளீன் போல்டு அல்லது கேட்ச்.  குமார் விளையாடும் போது அவன் பேட்டிற்கு அருகாமையில் ஐந்து பேர் நின்று கொண்டு பந்து பேட்டில் பட்டதுமே நான் முந்தி நீ முந்தி என்று கேட்ச் பிடித்து விடுவோம், அவ்வளவு மேலாகக் கெந்துவான்.  அவனுக்கு பௌலிங் வராது.

குமார்த் தங்கத்தால் ப்ரயோசனம் உண்டென்றால் அது அவன் fielding செய்யும் போது தான், அதிலும் இரண்டாவது ஸ்லிப்பில் தான் நிற்பான்.  ஸ்ரீதரே தட்டுத் தடுமாறி ஸ்லிப்பில் அடிப்பான், பந்து நேராக குமாரின் கைக்குப் போகும், கண்டிப்பாகத் தவற விடுவான்.  ஒரு பந்து கூட அவன் பிடித்து நான் பார்த்ததில்லை. 

ஸ்ரீதர் ‘இந்த நம்பிக்கை தான் நம்மையெல்லாம் காக்கோனும்னு’ சொல்லிக் கொண்டு ஒரு ரன் எடுத்து விடுவான்.

சீனியர்ஸ்

P.V.Gopalakrishnan (PVG) அன்பான மனிதர். நேதாஜி ரோட்டின் கிரிக்கெட் வளர்ச்சிக்குப் பெரிதும் வித்திட்டவர். Legnth bowler. Technic உள்ள bowler. பேட்ஸ்மேன்களின் weakness ஐக் கண்டுபிடித்து அவர்களை அவுட்டாக்கியவர். தெரு டீமின் captain. Perfect All Rounder. Hard hitter. Green park ground இவருடைய favourite. ரயில்வே லனைத் தாண்டி நிறைய sixer அடித்திருக்கிறார். எந்த எந்த பேட்ஸ்மனுக்கு எப்படி bowling போடணும் என்று கத்துக் கொடுத்தவர். Pillar of Nethaji Road Cricket. நிறைய ஜெயித்துக் கொடுத்திருக்கிறார்.

ரொம்ப நாள் கழித்து ஒரு மேட்ச் திருபானைகாவல் டீமோடு விளையாட வந்தார். ஒரு (செவிட்டு – மன்னிக்கவும் பேர் ஞாபகம் வரவில்லை) பேட்ஸ்மேன் எல்லாரையும் பின்னி எடுத்தான். PVG பொறுக்க மாட்டாமல் ‘மாப்ள (எல்லோரையும் அப்படித்தான் கூப்பிடுவார்) பந்தைக் கொடு’ என்று வாங்கி ஆட்களை நிக்க வைத்து நடு பிட்சில்  பந்தை ஸ்லோவாகப் போட்டு அவனை அவுட்டாக்கினார். ‘ இந்த மாதிரி காட்டாங்களுக்கு இப்படித்தான் போட்டு அவுட்டாக்கணும் மாப்ள’. மொத்தத்தில் பெரிய player.

P.V.Raju (P.V.Subramanian) நேதாஜி தெருவின் மிகப் பெரிய வேகப் பந்து வீச்சாளர். நிறைய steps எடுத்து ஸ்பீடாக ஓடி வந்து bowl செய்வார். bowling போடுவதற்கு முன் பந்தைத் தூக்கிப் போட்டு பிடித்துக் கொண்டிருப்பார் (சிறிது உயரம் தான்) பந்தை இரு கைகளாலும் முறுக்கி எடுப்பார். Marshall மாதிரி திடு திடுவென்று ஓடி வந்து போடுவார். பாதி wickets – clean bowled. பந்து வீசும்போது முகமெல்லாம் செக்கச் செவேற் என்று ஆகி விடும். ஏற்கனவே நல்ல சிவப்பு. ரத்தம் முகமெல்லாம் பாய்ந்து விடும். Big Match winner. Highly disciplined person.

அவர் ஸ்வபாவம் Like Vadivelu give respect take respect. PVG அளவுக்குப் பழக மாட்டார். தன் திறமை மேல் கர்வம் உள்ளவர். Terrific pace bowler. டென்னிஸ் பால் கிரிக்கெட்டில் அவருடைய speed is amazing. No one can touch his speed. க்ரிக்கெட் பந்தில் விளையாடி இருந்தால், மிகப் பெரிய சாதனையாளராகி இருக்கக் கூடும்.

கண்ணாடி சுரேஷ் சதாசிவம் அத்தைப் பையன் சுரேஷ் ஒரு straight bat player. நன்றாக விளையாடுவான். செம பௌலர்.  ஏதோ ஒரு டீமுக்கு (க்ரிக்கெட் பால்) விளையாடிக் கொண்டிருந்தான். தெருவில் குடியிருந்தாலும் விளையாட வர மாட்டான். விளையாடிக் கொண்டிருக்கும் போது cross செய்து போய்விடுவான்.  ஒரு டென்னீஸ் பால் மட்டம் என்று நினைத்தானோ.  தவிர அவன் வயது சீனியர்ஸ் ரவி G மற்றும் ஜீனியர்களாகிய எங்களுக்கும் இடைப் பட்ட வயது, அது கூட காரணமாக இருக்கலாம். ஸ்ரீதரும் ஆர்.சுரேஷும் இவனுக்கு க்ளோஸ் ப்ரண்ட்ஸ். இவனைப் பற்றி இப்படி எழுதியதால் வரகூர் ப்ரதர்ஸ் என்னிடம் சண்டை போடாமல் இருக்க ரங்கநாதர், யேசு, அல்லா, கார்ல் மார்க்ஸ் (ஜெசு பொருட்டு) ஆகியோரைப் ப்ரார்த்திக்கிறேன்.

P.V. Ravi P.V. ரவி நல்ல ஃபாஸ் பௌலர்.  PV Ravi யின் Good Shot two runs தான் எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும். நான் சொல்லப் போகும் விஷயம் ஆச்சரியமாக இருக்கும். சீனியர் டீமில் 5 best bowlers, PV Raju, PVG, Ravi, PV Ravi and Sekar (brother of Gundu). PV Raviயும் நல்ல pace bowler. எல்லோருமே equal contribution to the team. ஆனால் PV Ravi has also played role in winning the matches by taking prime wickets. This is the truth.

ஜூனியர்ஸ்

அமர் Creaseஐ விட்டு இரண்டடி எகிறி தான் பேட்டிங் பிடிப்பான். பேட்டை டொக் டொக்கென்று தரையில் பந்து வரும் வரை தட்டிக் கொண்டேயிருப்பான். கொஞ்சம் drives ஆடுவான். Square cut அடிப்பான். ஆனால் ப்ரயோசனம் இல்லை. பந்து செட்டியார் வீட்டுக்குள் போய்விடும். இல்லாவிட்டால் சத்திரத்திற்குள் தூக்கி அடிப்பான். Ground ஆக இருந்தால் sixer என்று சொல்லுவான். ரவி bowling அவனுக்கு terror. ரவி toss செய்து தூக்கிப் போடுவான். அமர் அவுட்டாகி விடுவான். பல சமயங்களில் ‘அண்ணா நான் பார்க்கவில்லை திருப்பிப் போடுங்கள்’ என்பான். ரவி ஓடி வந்து பௌல் பண்ணாமல்

‘என்ன அமர் ரெடியா’ என்பான்.

அமருக்குக் கோவம் வந்து விடும். அண்ணா போடுங்கள்.

வேகமாக எகிறி வந்து பந்தை கோட்டை விட்டு stumped ஆவான். Bowling சளைக்காமல் போடுவான். ரவி ‘அமர் லேசிலே அடிக்க மாட்டான், அடிச்சான்னா’ என்று அடிக்கடி கூறுவான். Hook shot அவனுக்குப் பிடித்த shot. சும்மா இருக்கும் நேரத்திலேயும் பேட்டை வைத்துக் கொண்டு hook shot try பண்ணுவான். அவனுடைய ஆசை Viv Richards மாதிரி hook shot ஆட வேண்டும். ஆனால் தெருவில் அந்த ஷாட்டிற்கு பிரயோசனமே கிடையாது.  பந்து சத்திரத்தில் தொலைந்து தான் போகும், அந்த ஒரு முறையைத் தவிர.

வழக்கம்போல் Viv Richards hook shot ஆடினான் நான் பக்கத்தில் இருப்பதைப் பார்க்காமல். விளைவு பேட் என் நெத்தியைச் சொடேர் என்று தாக்கி புசுபுசுவென்று வீங்கியது.  தில்லையின் தயவால் வீக்கம் ஒரு எல்லையுடன் நிறுத்திக் கொண்டது.  இந்த சம்பவத்தின் கற்பனையை ஸ்ரீதருக்கு விட்டு விடுகிறேன்.

தற்போது அமர்America வில் week ends cricket பிய்த்தெடுக்கிறானாம்.

Mukund Copy book style batsman. Gavaskar மாதிரி straight bat. நல்ல பொறுமையான batsman. ஒரு பயலும் அவனை அவுட்டாக்க முடியாது. He used to wait for the loose balls. He plays according to the merit of the ball. Bowling ரன் கொடுக்காத மாதிரி போடுவான். அசராமல் பந்தை பிளாக் செய்து bowlerகளின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டவன்.  எவ்வளவு கண்டல் செய்தாலும் பொருட்படுத்த மாட்டான்.  சிவ சங்க்கர் இம்மாதிரி டொக்கு மாஸ்டர்களை ஏதவது சொல்லி டைவர்ட் செய்து அவுட்டாக்குவதில் மன்ன்ன்.  ஆனால் முகுந்த் காரியமே கண்ணாயிருப்பான், அவுட்டே ஆக மாட்டான்.  பௌலிங்கும் நன்றாகப் போடுவான். 

Sathish (Azeem Hafeez) We used to call him ‘Joel Garner’. Next to PV Raju, he has bowled with terrific pace. பந்து பிட்ச் ஆனவுடன் மார்பளவுக்கு எம்பும். ஸ்பீடும் accuracy யும் ஒரு சேரப் பெற்றவன். அலட்டிகாத டைப். Battingஉம் பிரமாதம். பக்காவாக விளையாடுவான். Best All Rounder, very good fielder. He can be termed as junior PVG.

Sivasankarஐ (எப்போதும் அவன் தான் முதலில் பேட் செய்வான் – ஜூனியர்களோடு ஆடும் போதும்) முதல் பாலில் சதீஷ் அவுட்டாகி விடுவான். இது பல முறை நடந்தது உண்டு.

சிவசங்கர் உடனே ‘trials’ என்று சொல்லி விடுவான்.

சரி ஆடுய்யா என்று சதீஷ் சொல்லி விடுவான். சதீஷ் மட்டுமில்லை, செட்டியார் கண்ணன், பாபுஜி கண்ணன், அசோக் எல்லோருமே சிவசங்கருக்கு விட்டுக் கொடுத்து விட்டு விடுவார்கள்.

இப்போது bowling போட வந்தால் பல முறை பொத் பொத்தென்று விழுகிறான். Now he has reduced his weight and become fit. Who knows, he may show is class in the next meet.

Ashok, Chettiar Kannan and Babuji Kannan அசோக் நல்ல bowler. kapil dev மாதிரி action. Good Length bowler. நல்ல பேட்ஸ்மேன். All rounder.

பாபுஜி கண்ணன் நல்ல nippy bowler. Medium pace.

செட்டியார் கண்ணன் நல்ல பேட்ஸ்மேன். பெரிய batsman என்று ராஜூ மற்றும் சிவசங்கரால் போற்றப் பட்டவன். But he is not as good as Sathish, though Raju refuse to accept.

ராஜூவும் சங்கரும் சேர்ந்து ஒரு விஷயத்தை முதலில் தூக்கி விடுவதற்காக ஆரம்பிப்பார்கள். பிற்பாடு அவர்கள் மனசிலேயே அது ஊன்றி வேர் விட்டு வளர்ந்து விடும். அதன் பின் அதுவே உண்மை மாதிரி ஆகி விடும். அது தான் கண்ணன் விஷயத்திலும். நல்ல player தான். ஆனாலும் பெரிய அளவு அவனை இருவரும் உயர்த்தி விட்டார்கள்.

உண்மை என்னவென்றால் ஜுனியர்களில் பெரிய (we can include seniors also) player SATHISH

நேதாஜி ரோட்டிற்கு வந்து போய் விளையாடிய சில நபர்கள்

சந்தானம் இவரை மறக்க முடியாது. மெட்ராஸில் (தற்போதைய சென்னை) வேலை பார்த்துக் கொண்டிருந்தார். லீவு கிடைக்கும் போதெல்லாம் வந்து விடுவார். அவர் உபயத்தில் நாலைந்து பந்துகள் வாங்கி விடுவோம். சளைக்காமல் பௌலிங் போடுவார். Off spin. எப்பவும் சிரித்த முகம். எல்லோடருடனும் நட்பாகப் பழகுவார். அவராகவே ‘பந்து இருக்காமா’ என்று சொல்லிவிட்டு 4 பந்துகளுக்குக் காசு கொடுத்து விடுவார். நாங்களும் அன்றே பந்துகள் வாங்கி விடுவோம். பந்துகளைத் தவிர நாசேயில் coffee, tea sponsor செய்வார். விடாமல் சிகரெட் பிடிப்பார். ஒன்று முடியும் தறுவாயில் மற்றொன்றை பற்ற வைத்து விடுவார். எங்களுக்குச் சமமாக அரட்டை அடிப்பார். ரவியைத் தவிர சீனியர் வரிசையில் இவரிடம் மட்டும் தான் நாங்கள் free ஆகப் பழகினோம். பேட்டிங்கிலும் நாலைந்து ரன்கள் அடிப்பார்,தெருவைப் பொறுத்தவரை அது பெரிய ஸ்கோர்.   ரவிக்கும் நல்ல friend. He is gem of a man.

கிச்சாமி என்கிற கீச்சாமி கிச்சாமி மிகச் சிறந்த leg break bowler. நிறைய turn கிடையாது. Economical bowler. பேச்சு பயங்கரம். Running between the wickets – superb.

எங்களின் ஸ்கூல் மற்றும் காலேஜ் மேட்.  அந்த உரிமையில் அவனுக்குப் பொழுது போகாத போது நேதாஜி தெருவுக்கு வந்து க்ரிக்கெட் ஆடுவான். 

ரவியை ‘அண்ணா’ என்று தான் அழைப்பான். ஒரு நாள் ‘அண்ணா நான் jimமுக்குப் போகிறேன்’ என்றான்.

ரவி ‘டேய் ராஜு, சங்கர் இங்க பாருடா நம்ம கீச்சாமி jimமுக்குப் போறானாம் என்று அவன் armsஐ பிடித்துச் சொல்லுவான். அன்று முதல் எனங்களிடையே ‘கீச்சாமி ஜிம்முக்குப் போறானாம்’ (இது இன்று வரை வழக்கத்தில் உள்ள வார்த்தை) famous ஆகிவிட்டது.

கிச்சாமியின் திறமையைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அவனைக் கண்டால் வீதி மக்கள் எல்லோருக்கும் சிம்ம சொப்பனம். ஆனால் நேதாஜி ரோட்டின் TRIO (ரவி, ராஜு, சங்கர்) அவனைக் காலி பண்ணி விட்டார்கள். கீச்சாமி ஒரு நாள் கண்டியை (கண்ணன் – எங்கள் classmate) தெருவில் விளையாடக் கூட்டிக் கொண்டு வந்தான். பெரிய player என்று அறிமுகப் படுத்தினான். ஸ்ரீகாந்த்தை விட நிறைய பவர், வாய்க்காலுக்குப் பந்து போகும் வரை அடிப்பான் என்றான்.

Unfortunately விளையாடிய 5 நாட்களிலிலும் கண்டி சீக்கிரமே அவுட்டாகி விட்டான். இதெல்லாம் என்ன இடமா , சும்மா off sideஇல் மட்டும் ஆடற மாதிரி தெரு என்று புகழ்ந்து ? விட்டுப் போனான்.

கீச்சாமி இதை மனசில் வைத்திருப்பான் போலும். என்னையும் ஜெ.சுரேஷையும் ஒரு நாள் கோரத மூலையில் விளையாடக் கூப்பிட்டான். நாங்களும் மற்றவர்களைப் புழு போல் பார்த்து விட்டு பெரிய மரியாதை கிடைத்தாற்போல் போனோம்.

No over basis, no LBW, only innings இவை தாம் முக்கிய conditions. நட்டனும், தொன்னைக் காது பாலாஜியும் ஆடினார்கள். கீச்சாமி கண்டியை அறிமுகப் படுத்திய மாதிரியே எங்களிருவரையும் அறிமுகப் படுத்தினான். நாங்களும் தலையசைத்து ஏற்றுக் கொண்டோம். இருவரும் தலா 20 overs வீசியிருப்போம். ஒருத்தன் கூட அவுட்டாகவில்லை. அதை விடக் கொடுமை என்னவென்றால் well left வேறு விட்டார்கள். பெரிய கும்பிடு போட்டு விட்டு அதன் பின் நாங்கள் வீதிப் பக்கமே போகவில்லை.

கிச்சாமி க்ரிக்கெட் பாலில் நல்ல ப்ளேயர்.  நேஷனல் காலேஜுக்குக் கேப்டன்.  என்னையும் ஜெசுவையும் க்ரிக்கெட் பாலில் விளையாடுவதற்காக ட்ரையல் பொலிங்க்கு அழைத்தான்.  நாங்களும் போனோம்.  ஒரு பந்து கூடத் தரையில் பிட்ச் ஆகவில்லை.  எல்லாப் பந்தும் விக்கெட் கீப்பர் மண்டையை நோக்கிச் சென்றது.  கிச்சாமி ஒரு பெரிய கும்பிடு போட்டு விட்டான்.

கோபி கோபி சில நாட்கள் ஆடியிருக்கிறான். பாதி வார்த்தைகள் ஹிந்தி தான். அதுவும் கெட்ட வார்த்தைகள் தான்.  Off spin and Leg spin இரண்டும் நன்றாக போடுவான். பயங்கர அகராதி, ஸ்ரீதரே பயப்படும் அளவுக்கு. பந்து சொய்ங்க் சொய்ங்க் என்று பயங்கரமாக இரண்டு பக்கங்களிலும் போகும். அவனை அடிப்பது கொஞ்சம் சிரமம் தான் (வெங்சர்க்கார் ஒத்துக் கொள்ளாவிட்டாலும்).

வேதராமன் வேதராமன் off spinner. பந்து pitchஆனவுடன் மார்பளவு பயங்கர turn ஆகி வரும். அவனையும் அடிப்பது கஷ்டம் தான். அவனிடம் நாங்கள் பெரிய players போல் பாம்பேயில் பேசிக்கொண்டிருப்போம். அவனும் சுவாரசியமாக கேட்டுக் கொண்டிருப்பான். ஒரு நாள் கூட அவனைப் பற்றி சொன்னது கிடையாது. என்னுடைய கல்யாணத்திற்கு வந்த போது தான் அவனுக்கு தெருவில் விளையாட chance கிடைத்தது. அப்புறம் தான் அவன் pudukottai district player, coach for women cricket (ஸ்ரீதர் பொறாமை கொள்ளாமல் இருக்க) என்ற விஷயமெல்லாம் தெரிந்தது. சரியான player.

இவர்களைத் தவிர செட்டியார் வீட்டுப் பையன்கள் பாஸ்கர், கோபால் ஆகியோர் விளையாடி இருக்கிறார்கள். Old captain nathan (nathu) சில நாட்கள் விளையாடி இருக்கிறார். பெரிதாக சொல்லும் அளவுக்கு அவர்கள் தங்கள் பதிவைத் தெருவில் பண்ணவில்லை.

********

One Reply to “நேதாஜி ரோட் நினைவுகள் – XXV – க்ரிக்கெட் பகுதி 2”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)