நேதாஜி ரோட் நினைவுகள் – XXIV – க்ரிக்கெட் பகுதி 1

Friends

இது நேதாஜி ரோட் விளையாட்டுக்களின் தொடர்ச்சி.

க்ரிக்கெட் ப்ரதான விளையாட்டென்பதால் ஒவ்வொருவரின் ஸ்டைலைப் பற்றி விவரித்தே ஆக வேண்டும்.  ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும், ஒவ்வொருவரின் திறமையும் அவர்கள் நேதாஜி ரோட்டில் மற்றும் நேதாஜி ரோட் டீமுக்காக ஆடியதைக் கொண்டே எழுதியிருக்கிறேன்.

பாலா Full contribution to the Nethaji cricket. Tendulkar புகழின் உச்சியில் இருந்தபோது காம்ப்ளி, மஞ்ச்ரேக்கர் புகழ் தெரியாதது போல், நல்ல player ஆக இருந்தாலும் ஸ்ரீகாந்த் அளவுக்குப் புகழ் லோக்கலில் கிடைக்கவில்லை. பாலா நல்ல leg spin bowler. நல்ல powerful hitter. குறை ஒன்றும் கூற முடியவில்லை. Like Tendulkar அவனே நினைத்தால் மட்டும் தான் அவுட் ஆவான். ஜெசுவோ, ஆர்.சுவோ, நானோ அவனை pinpoint பண்ணி அவுட்டாக்கியதாக என்றுமே கிடையாது. ஜெசு ஆட்சேபணைத் தெரிவிக்கலாம்.  Always match winner. கரிக்குண்டன் மற்றும் பாஷ்யம் தேவி theatre பின்புறம் உள்ள groundஇல் சுருட்டியதற்காக boys high school groundஇல் revenge எடுத்தவன். அவனுடைய 52 not out score இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது. 49 ரன்னில் சேஷாத்ரி அவனுக்கு நடு மாட்சில் சோடா கொடுத்ததும் எல்லாருடய நினைவிலும் இருக்கும். தவிர திருவானைகாவலுடனான மாட்சில் ரவி resign பண்ணி ஸ்ரீகாந்த் காப்டனாகி பாலாக்கு பௌலிங்க் கொடுத்து அவன் 6 wickets எடுத்து மாட்சை ஜெயித்தது குறிப்பிடத்தக்கதாகும். Running between the wickets amazing. மொத்தத்தில் A REAL PLAYER

ஸ்ரீகாந்த் Very easy stance. நல்ல opening batsman, powerful hitter. ஸ்கூல் படிக்கும் சமயத்தில் District level ஆடியிருக்கிறான்.  காலேஜ் டீமிலும் ஆடியிருக்கிறான்.  காலேஜுக்கு விளையாடும் போது அண்ணா ஸ்டேடியத்தைத் தாண்டி ஒரே ஒரு முறை sixer அடித்திருக்கிறான். அன்றிலிருந்து க்ரிக்கெட் சர்க்கிளில் ப்ரசித்தம் ஆயிட்டான்.  திருவானைக்காவல் ground இல் பல முறை 3 அடித்திருக்கிறான். மிகப் பெரிய பெயர் வாங்கியிருக்கிறான்.

Wicket keeping நன்றாக செய்வான். அதிலும் பெரிய பெயர் திருவானைக்காவல் வட்டாரத்தில், இந்த பக்கம் 4 அடி, அந்த பக்கம் 4 அடி ஒரு பந்தும் அவனைத் தாண்டி போகாது என்று பேச்சு. நிஜத்தில் அவ்வாறு இல்லை.  ஆனாலும் மிகப் பெரிய சாதனை என்று மேட்ச் விளையாடும் போது நேதாஜி டீமுக்கு செய்ததில்லை.

தெரு க்ரிக்கெட்டில் ஜெசு போடும் ஸ்லோ பாலை ஸ்லோ பால் என்று சொல்லிக் கொண்டே செட்டியார் ஷெட்டின் மீது அடித்து ரன் எடுத்து விடுவான்.  ஸ்ரீகாந்த் bowlingஐப் பற்றி குறிப்பிட வேண்டியதில்லை. Maximum wide ball போட்டது அவன் தான்.

ராஜு நல்ல stance. பாதி நேரம் player srikanthஐப் போல் இரண்டு கைகளாலும் மண்ணைத் தேய்த்துக் கொண்டிருப்பதால் கொஞ்சம் கவனச் சிதறல். மனசுக்குள் Vengsarkar என்று எப்போதும் நினைப்பு. மிகப் பெரிய player என்று நம்மில் பல பேர் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் (ராஜு அதைப் பற்றி கவலைப் பட மாட்டான் – he is very strong as far as cricket is concerned) his contribution to the team is highly appreciable. Match winner (ஜெ.சு கோபிக்காமல் இருக்க). ராஜு is an excellent fielder. தெருவில் மட்டுமில்லாமல் matchகளிலும் நன்றாக பந்தைத் தடுப்பான். ஒரு catchஐயும் கோட்டை விட்டதில்லை. பௌலிங் சுமார் தான். ஆனால் அவன் கற்பனையோ leg break, off break, off cutter leg cutter, நிஜத்திலோ வெறும் straight ball. He can be called as Pillar of Nethaji cricket.

ஜெ.சுரேஷ் தெருவின் ப்ரதான bowler, கிங் bowler என்று கூடக் குறிப்பிடலாம்.  Reasonable pace. அவனைப் பொறுத்தவரை slow ball அவனுடைய weapon. unfortunately slow balls were hit. நல்ல ரன்னப். மிகக் கடின உழைப்பு. அயராமல் bowling போடுவான். தெருவுக்காக உழைத்துத் தேய்ந்தவன். தினமும் தொடர்ந்தால் போல் 3 மணி நேரம் bowling போடுவது ரொம்பக் கஷ்டம். அவனிடம் ஜெயிக்கணும் என்கிற வெறி எப்போதும் உண்டு.

மனசுக்குள் தன்னை KAPIL DEV என்று நினைத்துக் கொள்வான். அதே போல் action இருப்பதாகவும் கற்பனை செய்து கொள்வான்.  தெருவின் Ace bowler in matches. Good contribution to the Team in the matches.

திருவானைக்காவல் டீமின் guest player. நிறைய wickets எடுத்திருக்கிறான். திருவானைக்காவல் டீமின் match winner. Batting ஐப் பொறுத்தவரை திருவானைக்காவல் டீமுக்கு நிறைய ரன்கள் குவித்திருக்கிறான் (நிறைய பேருக்குத் தெரியாது). bat and pad gap உண்டு. ஒவர் பிட்ச்சும் இல்லாமல் லெங்த்தும் இல்லாமல் ஒரு மாதிரி இரண்டுக்கும் நடுவில் பந்தை வீசினால் அவுட் நிச்சயம். திறமை இருந்தும் அவசரத்தினால் அவுட்டாகி விடுவான். டீமுக்கு பெரிய அளவில் batting contribution அவ்வளவாகக் கிடையாது (யார்தான் பெரிய ஸ்கோர் பண்ணியிருக்கிறார்கள்) Very serious while playing. மொத்தத்தில் PERFECT TEAM MAN.

ஆர். சுரேஷ் முதலில் எல்லோருடைய ஞாபகத்திற்கும் வருவது அவனுடைய tantalising length. பந்துக்கு வலிக்கும் போல் பிடித்துக் கொள்வான். speed உம் அதே. ஆனால் எல்லா பந்துகளும் length balls. கோபப்பட்டால் அவுட்டாக வேண்டியது தான்.

Greenidge கபில்தேவ்விற்குக் கொடுத்த மதிப்பு ஸ்ரீகாந்த் ஆர். சுரேஷ்ஷுக்குக் கொடுப்பான். இவனுடைய victim பெரும்பாலும் ஜெசு, அமர், ஸ்ரீகாந்த். ஸ்ரீகாந்த்தின் பொறுமையை சோதித்த ஒரே bowler. எதிலும் அவசரம் கிடையாது. இரண்டே step தான். பூப் போல் போடுவான். எல்லாருடைய ஆசையும் அவனுடைய ஒவ்வொறு பந்தையும் sixer அடிக்கணும் (particularly J.Suresh). ஆனால் நிஜத்தில் ஒன்றும் நடக்காது. ராஜு மட்டும் தான் ஒரளவுக்கு அவன் bowlingஐ கையாண்டான் என்று சொல்லலாம்.

பேட்டிங்கைப் பொறுத்தவரை நன்றாக பிளாக் செய்வான். லேசில் அவுட்டாக்க முடியாது. Loose ballகள் வந்தால் ஒரு ரன் அடிப்பான். Resonable contribution to the team in the matches. He is a typical one day bowler. ரொம்ப அலட்டிக்காத டைப். ஜெயித்தாலும் தோத்தாலும் கவலைப் பட மாட்டான். மிக முக்கியமான விஷயம், சட்டை, கைலியில் அழுக்கே படாமல் ஆடுவான். தூசி படாமல் பார்த்துக் கொள்வதில் ‘அவனை மாதிரி இன்னி வரைக்கும் ஹூம் ஹூம்.

சிவசங்கர் தெருவில் முதல் பந்திலே அவுட்டாகினாலும், trials என்று சொல்லிவிடுவான். ஸ்ட்ம்ப்புகள் முழுவதையும் மறைத்துக் கொண்டு நின்று விடுவான். லேசில் அவுட்டாக்க முடியாது. நிறைய பவர் கிடையாது. அவனுடைய maximum shotஏ ஷெட் வரைக்கும் தான் போகும். ஒரே fielding position தான், சத்திரம் பக்கத்தில். நன்றாகத் தடுப்பான். அனாயசமாகக் கேட்ச் பிடிப்பான்.  பௌலிங் போட ரொம்பவே ஆசைப் படுவான்.  ஜெசுவும் நானும் விடாமல் ஒரு end பௌல் செய்வோம்.  அவனுக்கு சான்ஸே கிடைக்காது.  அதன் காரணமாக அவன் ஜெசுவையும், என்னையும் ஆர்.சுரேஷையும் சில நாட்கள் ஒரே டீமில் போட்டு விடுவான்.  அப்ப தான் அவனுக்கு பௌலிங் சான்ஸ் கிடைக்கும்.  ஒரு ஒவர் complete பண்ண குறைந்த பட்சம் 10 பந்துகள் தேவைப் படும், wide காரணமாக.  சங்கரன், ராஜு, ரவி கூட்டு சேர்ந்து பேச்சால் மற்றவர்களை அவுட்டாக்கி விடுவார்கள், முக்கியமாக ரகு, அமர், பாண்ட்ஸ் மாமா. பேச்சளவில் டீமுக்கு பெரிய contribution. மொத்ததில் ஒரு Team Man.

ரவி எழுத வேண்டாம், ஒரே family (carribean ராஜு சங்கரன் பாஷையில்) என்று தான் விட்டிருந்தேன். எப்படியும் ராஜு comment கொடுக்கப் போவதால் எழுதுவதே சாலச் சிறந்தது.

ரவி ஆரம்ப காலங்களில் fast bowler (few of us only know. probably sridhar, R.Suresh). Green park ground is his favourite. P.V. ராஜு பெரிய பௌலர் என்றாலும் ரவி played a vital part in winning the matches. அந்தக் காலத்தில் எல்லா டீம்களையும் ஜெயித்திருக்கிறார்கள். அவர்கள் பெருமையாகக் குறிப்பிடுவது கீழ சித்திர வீதி டீமை ஜெயித்ததைப் பற்றி தான். கீழ சித்திர வீதி டீம் பெரிய டீம். அவர்களை bet வைத்து ஜெயித்து விட்டார்கள்.

சீனியர்ஸ் மேட்ச் ஆடும் போது சின்னப் பையன்கள் நாங்களும் கூட்டமாகப் போவோம். சத்தம் போடுவோம். ரவி ஆரம்பக் காலங்களில் fast bowler.  நிறைய விக்கெட்டுகள் எடுத்திருக்கிறான்.

ரவி வயது ஆனவுடன் slow bowler ஆக மாறி விட்டான். Toss பண்ணி நிறைய wickets எடுப்பது போல் ரவிக்கு நினைப்பு. அமர், ரகு எப்போதும் ரவியின் victims. ரவி ஒவ்வொரு முறை toss செய்து போடும் போது sixer அடிக்க வேண்டும் என்று ஜெசு சொல்லுவான். ஜெசுவைப் பொறுத்த வரை வேகமாகப் போடாத எந்த பௌலரையும் ஒப்புக் கொள்ள மாட்டான்.

ரவி, ராஜு, சங்கர் கூட்டணி, ஸ்ரீதருக்குப் பிறகு (ஸ்ரீதர் சிங்கிள் ஆளாக எல்லோரையும் சமாளிப்பான். ஒரு வலுவான கூட்டணி (பேச்சளவில் தான்). வேண்டுமென்றே என்னையும் ஜெசுவையும் ஒரு டீமில் போட்டு விடுவார்கள். அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் மூவரும் மட்டும் போதும் எல்லோரையும் ஜெயித்து விடலாம் என்று நினைப்பு. ஆனால் உண்மையில் ஒரு நாளும் ஜெயித்ததில்லை.

ரவியின் running between the wickets – hats off. ஒரு நாளும் ரன் அவுட் என்ற பேச்சுக்கே இடமில்லை. அவர்கள் மேட்ச் விளையாடும் காலத்தில் ரவியிம் சேஷாத்ரியும் சேர்ந்து தொட்டதிற்கெல்லாம் ரன் எடுத்து விடுவார்கள். அவ்வளவு வேகம். ரவி நிறைய தடவை டீமுக்கு captain ஆக இருந்திருக்கிறான். ஒரு மேட்சில் பாதியில் captaincyஐ ஸ்ரீகாந்திற்கு கொடுத்த பிறகு காப்டனாக தொடரவில்லை.

அதன் பின் பாண்ட்ஸ் மாமா தான் காப்டன். ரவியின் famous vasanam ‘அமர் ரெடியா’. ரவி எல்லோருடனும் friendship maintain பண்ணியிருக்கிறான். ஒவ்வொருத்தருக்கும் ரவியிடம் தனி அபிமானம் உண்டு. பாண்ட்ஸ் மாமாவுக்கு ரவி விசேஷ சலுகைகள் அளித்திருக்கிறான். ரவி பௌலிங் போட்டு பாண்ட்ஸ் மாமா return catch கொடுப்பார். ரவி catchஐப் பிடித்துப் பின் விட்டு விட்டு ‘ஐயையோ கேட்ச்சை விட்டுட்டேன் சார்’ என்பான். ஒவ்வொரு முறையும் இப்படி தான். மொத்தத்தில் ரவி ஒரு natural leader

பாண்ட்ஸ் மாமா G.R.Viswanath Coach இடம் பயிற்சி பெற்றவர் (இது அவரே சொன்னது). Straight bat. அவர் appeal செய்யும் விதம் அலாதியானது. ‘ஹோ’ என்பார். எனக்குத் தெரிந்து தெருவில் LBW வே கிடையாது (இருந்தால் எப்படி ஸ்ரீதர், சங்கரன் பிழைப்பார்கள், தவிர ஜே.சுரேஷ் சந்தோஷமாக இருந்திருப்பான், எவ்வளவு தரம் காலால் அவன் பந்தைத் தடுத்திருப்பார்கள்).

ரவி அவுட்டு தான் சார், ஆனால் LBW கிடையாது என்பான். அவர் yes yes என்று கூறிக் கொள்வார். ஆனால் மறுபடியும் மறுநாள் ஆட வரும் போது காலில் வாங்கினால் கண்டிப்பாக ‘ஹோ’ என்று claim பண்ணுவார். In matches always Toss winning captain. கோவிந்தன் – fixing captain – tiruvanaikoil team, எப்பொழுதும் டாஸ் போட வருவான்.  பாண்ட்ஸ் மாமா காயினை சுண்டுவார்.  கோவிந்த்ன் கேட்ட ஹெட் அல்லது டெய்ல் விழுந்திருக்கும்.  அவன்  டீம் நண்பர்களுடன் பேசி முடிவு செய்து சார் நாங்க பேட்டிங் என்பான்.

பாண்ட்ஸ் மாமா “What you are telling, you have lost the toss and we have to decide, go and tell your team”

கோவிந்தன் தலையச் சொறிவான்.  அவன் டீம் நண்பர்கள்

          ‘அவர் எவ்வளவு பெரிய ஆளுடா, இங்க்லீஷ்லாம் பேசறார், பொய்யா சொல்லப் போறார், நீ தான் தப்பாப் பார்த்துருப்ப” என்பார்கள்.

          பாண்ட்ஸ் மாமா எங்களைப் பார்த்துக் கண்ணடிப்பார்.

 அவர் வந்த பின் ball supply தடையில்லாமல் இருந்தது. மேட்சிற்காக Fridge இல் பந்தை வைத்து மறு நாள் கொண்டு வருவார், with the smell of ponds powder. தவிர மேட்ச் ஜெயித்தாலும் தோத்தாலும் அவர் செலவில் PVயில் தோசை உண்டு. மொத்தத்தில் அவர் ஒரு Utility batsman and bowler.

ரகு ரொம்ப லேட்டாகத் தான் தெருவுக்குக் குடி வந்தான். அவனும் பாதி நாள் ஸ்ரீதரைப் போல ரங்க நகர் போய் விடுவான். சுமாரான வேகத்தில் பௌலிங் போடுவான். Medium speed Off spin. பாதி பந்துகள் lengthஇல் விழும். Sincere bowler. கரெக்டாக ரன் அப். நன்றாக உழைத்து பந்து வீசுவான். பேட்டிங்கில் அவனுக்கு ரொம்ப ஆசை.

ரவி மற்றும் ஆர்.சுரேஷ் அவனை எளிதில் அவுட்டாகி விடுவார்கள். ரகு பேட் செய்யும் போது அவனை சுற்றி வளைத்து close-in field அமைக்கப்படும். பந்தை போடுவதற்கு முன்னரே ‘ஏய் எல்லாரும் பக்கத்தில் போங்கடா, கேட்ச் பிடிங்கடா’ என்று எல்லாரும் கத்துவார்கள். ரவியும் ஆர்.சுரேஷும் பந்தை நன்றாக flight பண்ணுவார்கள். ரகு எகிறி வந்து அடிக்க முற்பட்டு பந்தை block செய்வான். அது catch ஆக அமையும். கேட்ச் பிடிக்கப் பட்டு அவன் அவுட்டாகி விடுவான்.

ரகுவிடம் பிடித்த விஷயம் ரொம்பவும் generous ஆகத் தான் அவுட்டாவதை ஏற்றுக் கொள்வான். Bowlerஐ acknowledge பண்ணுவான். இந்த பெருந்தன்மையான குணம் எங்கள் யாரிடமும் அப்போது இல்லை. எல்லோரும் அவனை அவுட்டாக வேண்டும் என்று இருந்த பொதும் அவன் யாரையும் திட்டியதில்லை. எல்லவற்றுக்கும் புன்சிரிப்புத் தான். பாதி மேட்ச் அவன் விளையாடாவிட்டாலும் எப்போதும் போல் தெருவில் விளையாட வருவான். அந்த அளவு maturity அந்தக் காலத்தில். Hats Off Ragunathan Rengarajan

அவனுடைய பேட்டிங் ஆசை ஒரு வழியாகத் தீர்ந்தது MGM Meet 2014 இல்.  எல்லோரையும் வெளுத்து வாங்கி விட்டான்.

ஜானா திறமையான wicket keeper. Flash stumping பண்ணுவான். ஸ்ரீகாந்த்தை விட fast stumping. அதிலும் ஒரே ஒரு stumpஐ மட்டும் தான் எடுப்பான். ஸ்ரீகாந்த் வேண்டுமென்றே எல்லா stumpகளையும் எடுப்பான். ஜானா பேட்டிங்க் சுமாராகத் தான் ஆடுவான். பாதி நேரம் விளையாடும் போது சிரிப்பை மூட்ட்டுவான். அவனுக்கு எப்போதும் ஜாலியாக இருக்கணும். நிறைய மேட்ச் விளையாடவில்லை. ஜாலி மனிதன்.

எனக்குத் தெரிந்து ஜானா ஸ்கூல் படிக்கும் காலத்தில் முதன் முதலாக பௌலிங்க் போட்டான் பி.வி.ராஜுவின் ஆணைப்படி. கையையும் தலையையும் ஒருவாறு சுத்தி ஜானா ஓவரை முடித்தான். அதன் பின் இன்றளவு ஜானா பௌலிங் போட்டு நான் பார்த்ததில்லை.

அவனும் ரகுவைப் போலவே MGM Meet 2014 இல் பேட்செய்து  எல்லோரையும் வெளுத்து வாங்கி விட்டான்.

HITTER ALIAS GUNDU SRIDHAR எதனால் அவனுக்கு hitter என்ற பெயர் வந்தது. எனக்குத் தெரிந்து அவன் துரைப்பிள்ளை வீட்டு லாந்திக் கம்பம் வரை கூட பந்தை அடித்ததில்லை. செட்டியார் வீட்டுக்கும், சத்திரத்திற்கும் உள்ளே தான் அதிகப் பட்சம் பந்து போகும்.

பௌலிங் போடும் போது ஒவ்வொரு பந்துக்கும் கைலியை அவிழ்த்து அவிழ்த்துக் கட்டுவான். இது அவனுடைய வழக்கம். பாதி ரன் அப்பிலே ‘கெகெகெ’ என்று சிரிக்க ஆரம்பித்து விடுவான். ‘வாத்யாரே’ நீ இந்தப் பந்தில் காலி தான். மறுபடியும் ‘கெகெகெ’ சிரிப்புதான். ஆனால் அப்படி ஒருவர் கூட அவுட்டாகியதில்லை.

அவன் விளையாடிய நேரம் ரொம்பக் குறைவு. பாதி நேரம் சிரிப்புத் தான். அவனுடைய பெயர் காரணம் ரவி தான். அந்தக் காலத்தில் Lloyd இந்தியா வரும் போது யாராவது சுமாரான playerஐ பெரிய பேட்ஸ்மேன் என்று சொல்லி விடுவான். உடனே அவனை டீமில் சேர்த்துக் கொள்வார்கள். அப்புறம் இலவச wicket தான். அவனை வைத்து ஆட வேண்டியது தான். ரவி அந்த technique ஐ உபயோகப் படுத்தி குண்டுக்கு hitter என்று நாமகரணம் சூட்டினான் என்று நினைக்கிறேன்.

பெயருக்கு ஏற்றார்போல் அவன் ஒருவரையும் மிரட்டியதில்லை. ஒரு ஹோட்டலில் முதலாளியே சர்வர், சரக்கு மாஸ்டர். ஒரு சூடான ரவா தோசை என்று ஆர்டர் பண்ணிவிட்டு அவனே தோசை ஊற்றப் போவான். அது போல் குண்டு யாரையாவது மிரட்ட வேண்டும் என்றால் அவன் தன்னைத் தானே மிரட்டிக் கொள்ள வேண்டும். எப்போதும் படு குஷியாக இருப்பான். அதிக பட்சம் ஒரு ஒவர் கூடத் தாங்க மாட்டான். அவுட்டாகி விடுவான். Match இல் அவனை சேர்த்துக் கொண்டதாக ஞாபகம் இல்லை.

ஸ்ரீதர் ஸ்ரீதரை எப்படியும் குமாருக்கு மேல் தான் வைக்க வேண்டும், ஒன்றும் விளையாடத் தெரியாதவர்களுக்கு RSS கிடைதாற்போல, எனக்கும் ராதாக்ருஷ்ணனுக்கும் Central Exciseஇல் வேலை கிடைதாற்போல. இதைப் பல முறை நாங்கள் ஆஃபிசில் கூறியிருக்கிறோம். ஸ்ரீதரை அவ்வளவு சொல்லக்கூடாது. அவன் பேட்டிங் செய்ய வந்தால் மூன்று ஸ்டம்புகளும் பௌலருக்குத் தெரியவே தெரியாது. கைலயை புரள விட்டு பேட்டை முன்னால் வைத்துக் கொண்டு நிற்பான். மிக விசித்ரமான stance.

ஒன்றை ஒத்துக் கொள்ள வேண்டும். அவனை யாராலும் அவுட்டாக முடியாது. ஸ்டம்புக்கு நேராக வரும் பந்துகளை மட்டும் தடுத்து ஆடுவான். shot அடிக்கத் தெரியாது. அவனுடைய maximum power சத்திரம் வரை பந்து போகும். bowling சுத்தமாகத் தெரியாது. Fielding சுமார். எனக்குத் தெரிந்து அவன் fielding செய்ததேயில்லை. ஆனால் வாய் சொல் வீரன். மற்ற எல்லாரையும் பேசியே அவுட்டாக்கி விடுவான். அவ்வளவு திறமை. slipஇல் கொஞ்சம் ஆடுவான். slip இல் அடிக்கும் பந்து catch ஆக நேராக குமாருக்கு வரும். அவன் சத்தியமாகப் பிடிக்க மாட்டான். ‘இந்த நம்பிக்கை தான் நம்மை எல்லாம் காக்கோணும்’ என்று பாடுவான்.

ஸ்ரீதரை ஒரு மேட்ச் கூட நாங்கள் சேர்த்ததில்லை. அவனும் ‘போங்கடா வெட்டிப் பயல்களா’ என்று சொல்லிவிட்டு ரெங்க நகர் போய் விடுவான் (பருவக் கோளாறு). குமார், ரகு, அமர் ஆகியோர்களை அவுட்டாக்கும் மிகப் பெரிய பொறுப்பு ஸ்ரீதரைச் சார்ந்தது. பேசியே அவர்களை அவுட்டாக்கி விடுவான். ஆர். சுரேஷ் போடும் பந்துகளை எல்லாரும் அடிக்க encourgage பண்ணுவான் (சங்கரன் பாஷையில் R.B.Choudhri…….). மொத்தத்தில் தெரு கிரிக்கெட்டில் ஸ்ரீதருடைய impact கம்மி தான்.

6 Replies to “நேதாஜி ரோட் நினைவுகள் – XXIV – க்ரிக்கெட் பகுதி 1

  1. என் பெயரே இதில் இருக்காது என்றுதான் நினைத்தேன். போனா போறதுன்னு என் பெயரை சேர்த்து விட்டாய்.
    நான் பல முறை பி வி ராஜுவை வெறுக்கடித்திருக்கிறேன். முகம் சிவக்க ஓஇ வந்து போடுவார். டொக் வெச்சதும் மூஞ்சி இன்னும் சிவக்கும். அக்காக்களால் எனக்கு அவங்க தெருவில் விளையாடும்பொழுது என்னை சேர்த்து கொள்வார்கள்.
    நீங்க வெங்கட்ரமணனை சேத்துண்ட மாதிரி. 😀

    1. வாஸ்தவத்தில் சேர்க்கக்கூடாது தான். சுதர்சனத்துக்கு மனது கேட்கவில்லை

  2. நானே க்ளெய்ம் பண்ணிட்டு நானே நாட் அவுட் சொல்லுவேன்னு கதை விடுவீர்களே. அதை எழுத மறந்துவிட்டாய்

  3. Excellent, giving an insight on each and every one who played in the street, their style of play and some who ‘also lifted their bat’ for namesake.

  4. அருமையான நினைவுகள். நம்ம ஜோயலை பற்றியும் கதறி கதறி போட்டாலும் உன்னாலும், ஜேசுவாலும் அவுட்டாக்க முடியாத முகுந்தை பற்றியும் சொல்லியிருக்கலாம். நமக்கு அடுத்த தலைமுறைகள் என்ற தலைப்பில் Joel, ASK, chettiar வீட்டு kannan, முகுந்த, நல்லதம்பி, ஜூனியர் கபில் அஷோக் பற்றியும் சொல்லியே ஆகவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)