நேதாஜி ரோட் நினைவுகள் – XXII – சில மலரும் நினைவுகள் – ஜானா 50

Thakkili

நினைவு தெரியாத நாட்களிலேயே ஜானா துணிச்சல்காரன். ஒண்ணாவது படிக்கும் போதே O.R.R. பள்ளியில் தக்ளி டீச்சரின் டார்ச்சர் (வைத்திருக்கும் தக்ளியின் அடிப் பாகத்தால் தலையில் கொட்டுவது) தாங்காமல் அவன் அண்ணன் நடராஜிடம் புகார் பண்ணியது, பின் நடராஜும் என் சித்தப்பா ரவியும் வந்து டீச்சரை மிரட்டியதின் (பள்ளியின் தலைமை ஆசிரியரின் தங்கை என்ற போதும்) காரணமாக ஐந்தாவது வரை தொந்தரவு இல்லாமல் ஸ்கூலில் இருந்ததற்கு காரணம் ஜானா தான். தக்ளியால் அடி வாங்கியவுடனேயே ‘என்ன செய்கிறேன் பார்’ என்று டீச்சரிடமே சவால் விட்டு விட்டு வந்து விட்டான். அதைச் சாதித்தும் விட்டபடியால் துணிச்சல் என்று தானே கூற வேண்டும்?

சேர்மன் பங்களாவில் பந்து விழுந்தால் தைரியமாக உள்ளே நுழைந்து பந்தை எடுத்து வந்து விடுவான். பங்களா காம்பௌண்ட் கோசத்திற்குக் கட்டப் பட்டிருக்கும். சின்ன சின்ன வடிவங்களாக ஓட்டை விட்டு கட்டப் பட்டிருக்கும். ஐந்து அடி சுவர். அந்த ஓட்டைக்குள் ஜானா லாவகமாக நுழைந்துப் பந்தை எடுத்து விடுவான். இல்லாவிட்டால் சுற்றிப் போய் பர்மிஷன் வாங்கி நாய்த் தொல்லையை சமாளித்துப் பின் பந்தை எடுத்து வர வேண்டும். இப்படியேதான் யாராவது ஆசைப் பட்டால் சின்ன மாவடுக்களையும் பறித்துத் தருவான். அப்போதிருந்தே ஜானாவுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை இருந்தது.

SSLC எக்ஸாம் படிக்கும் போது வாலிபால் (ப்ளாஸ்டிக் பந்து) விளையாட்டு எங்களை மிகவும் ஈர்க்கும். ஜானா, 10 நிமிஷம் படிச்சீனா 40 one word (science) score பண்ணிவிடலாம் என்பான். தோப்பில் படிக்கும் போதும் அலுப்பு வந்து விளையாடப் போகலாமாவென்றால், இன்னும் 10 நிமிஷம் படி atleast 10 மார்க்குக்காவது படித்து விடலாம் என்பான்.

Photo Courtesy: Behance.net

ஜானாவுக்கு மற்ற விளையாட்டுக்களை விட ‘கபடி’ மேல் தான் ரொம்ப இஷ்டம். ஸ்கூலில் intervelலில் கபடி விளையாடுவோம். ஜானா எதிரியின் காலைப் பிடிப்பதில் கில்லாடி. சப்பென்று இரண்டு கைகளாலும் காலைப் பிடித்து விடுவான். இறும்புப் பிடி, ஒருத்தரும் தப்ப முடியாது. அதிலும் ஒரு தனி ஸ்டைல் தான். Family gene follow ஆகிறது போலும். ஜீமுவும் எவனாயிருந்தும் கோட்டில் காலை வைத்ததும் உடனே பிடித்து விடுவான். ஜானாவும் ஜீமுவும் heavy built champions இல்லை தான், இருந்தும் அவர்கள் பிடியிலிருந்து தப்பித்தவர்கள் யாரும் கிடையாது.

குடும்பப் பாட்டு போல, நேதாஜி ரோட்டின் பாரம்பரியமே க்ரிக்கெட் விளையாட்டுத் தான். ஸ்கூல் படிக்கும் காலத்திலெல்லாம் நாங்கள் அனைவரும் உப்புக்குச் சப்பாணிதான். ஏதோ சேர்த்துக் கொள்வார்கள். பேட்டிங் எப்போதாவது கிடைக்கும். எல்லாம் அவன் கையில் தான் (பி.வி. ராஜு, ராஜு என்ற பெயர் கொண்டவர்களெல்லாம் அடுத்தவர்களைக் கன்ட்ரோல் பண்ணுவார்கள் போலும்). பி.வி.ராஜு சொல்படி தான் செய்ய வேண்டும். எனக்குத் தெரிந்து ஜானா முதன் முதலாக பௌலிங்க் போட்டான் பி.வி.ராஜுவின் ஆணைப்படி. ஒரு ஓவர் எனக்குக் கொடுத்தார். அடுத்த ஆள் இன்னொரு ஓவர் போட்டபின் தன்னிச்சையாக நான் தான் ஓவர் போட வேண்டும் (என்னுடைய முதல் ஓவரில் ஒரு ரன்னும் போகவில்லை) என்ற எண்ணத்தில் இரண்டு ஸ்டெப் வைத்திருப்பேன்.

உன்னை யாராவது ஓவர் போடச் சொன்னாங்களா? ஜானா நீ வா வந்து ஓவர் போடு.

கையையும் தலையையும் ஒருவாறு சுத்தி ஜானா ஓவரை முடித்தான். அதன் பின் இன்றளவு ஜானா பௌலிங் போட்டு நான் பார்த்ததில்லை.

தான் என்ன செய்யப் போகிறோம் அதைத் தான் செய்வோம் என்பதில் தெளிவான சிந்தனை ஜானாவுக்கு மட்டும் தான் உண்டு. மற்ற எல்லோரும் ‘இதைப் பண்ணலாமா என்று மற்றவரிடம் கேட்போம்’ அது பெரிய opinion ஆகிக் கடைசியில் நாம் நினைத்தது ஒன்றும் நடக்காது.

ஜானா அதில் தனித்திருப்பான். எதிலும் அவனுக்குக் குழப்பமே கிடையாது. அவ்வளவு பேரும் ஆர்.எஸ்.எஸ்ஸில் சேர்ந்த போது ஜானா மட்டும் சேராதிருந்தான். இத்தனைக்கும் அவனுக்குப் பிடித்த கபடி விளையாட்டும் ஆர்.எஸ்.எஸ்ஸில் உண்டு. தவிர ஜீமு தான் ஷாக்காவை உருவாக்கின ஆள். சுமார் 3 வருஷம் நாங்கள் எல்லோரும் ஆர்.எஸ்.எஸ்ஸில் இருந்த போதும் ஜானா மட்டும் கடைசி வரை சேரவேயில்லை.

முதலில் பிள்ளையார் கோவில் வாசலில் ஷாக்கா நடந்தது. நாங்கள் எல்லோரும் அதில் உள்ள exercise களைச் செய்யும் போது பிள்ளையார் கோவில் compound சுவர் மீது உட்கார்ந்து ஜானா பார்த்துக் கொண்டிருப்பான். எங்களுக்குச் சிரிப்பு மூட்டுவான். ஜானா ஏதாவது செய்தாலே சிரிக்கக் கூடிய ஆள் ஜெசு தான்.

உடனே ஷாக்காவில் கட்டளை வரும், ‘நம்மிடையே யாரும் சிரிக்க வேண்டாம்’.

எவ்வளவோ பேர் எவ்வளவு முயற்சி செய்தும் ஜானா ஷாக்காவில் சேரவில்லை. ‘இதெல்லாம் ரொம்ப நாள் ஓடாது என்பான். நாங்கள் ஏதோ தேசத்தைக் காப்பது போல் அவனை முறைப்போம். ஆனால் இறுதியில் ஜானா சொன்னபடியே ஜீமு, எஸ்.மு நீங்கலாக அனைவரும் ஷாக்காவை விட்டு வெளியேறினோம்.

உதவி செய்வதில் ஜானாவிற்கு நிகர் யாருமே இல்லை எனலாம். எந்த விஷயத்தையும் செய்ய முடியாது என்பதே ஜானாவைப் பொறுத்தவரை கிடையாது. கடைசி வரை முயற்சி செய்து விடுவான். 99 சதவீதம் வெற்றி தான். மீதம் 1 சதவீதமும் தோல்வி கிடையாது. RPN, KPN டிக்கெட் வாங்குவது, ரிஸர்வ் செய்த பஸ்ஸிலிருந்து வேறு பஸ்ஸிற்கு மாற்றுவது, etc. எல்லாவற்றையும் செய்து விடுவான்.   

ஜானாவிடம் உள்ள மிகப் பெரிய நல்ல பழக்கம் அவரவர்களுடைய தேவைக்கேற்ப உதவி செய்வது தான். தன்னுடைய கருத்தைத் திணிக்க மாட்டான். அவரவர்கள் விருப்பம் போல் உதவி செய்து விடுவான். ஜானாவைப் பொறுத்தவரை வாக்குக் கொடுத்தால் நிறைவேற்றி விட வேண்டும்.

ஒவ்வொருத்தருடைய மனப்பாங்குக்குத் தகுந்தாற்போல் நடந்து கொள்வான். நான், ஜெசு, ஆர்.சுரேஷ் ஒரு டைம் சொன்னால் ஐந்து நிமிடம் முன்னதாகவே வந்து விடுவான். அதே ஸ்ரீகாந்த் என்றால் ‘இந்தக் கடையே சிங்கப்பூரில் தானே நடக்குது’ கதை தான்.

ஸ்ரீகாந்த், ‘ஜானா நாங்க கிளம்பி விட்டோம் சரியா ஐந்து நிமிஷத்தில் மாம்பழசாலையில் வந்து நில்’ என்று சொல்லிவிட்டுக் குளிக்கப் போவான்.

ஜானாவின் பதில் ‘மாம்பழசாலையில் தான் அரைமணி நேரமாகக் காத்திண்டிருக்கிறேன்’.

Photo Courtesy: Cricketmash

க்ரிக்கெட்டில் ஜானாவின் கீப்பிங்க் ஸ்டைலே தனி. என்ன தான் பெரிய விக்கெட் கீப்பர் என்று ஸ்ரீகாந்த் பெயரெடுத்தாலும், ஜானாவின் பாணியே அலாதி தான். Flash stumping பண்ணுவான். அப்படியே மூன்று ஸ்டம்ப்புகளையும் எடுத்து விடுவான். பெரிய லெவலில் பேட்டிங்க் பண்ணியதில்லை காலேஜ் நாட்களில். ஆனாலும் MGM meetஇல்  வெளுத்து வாங்கி விட்டான்.

க்ரிக்கெட் தவிர ஜானாவிற்குப் பிடித்தமான விளையாட்டு செஸ். செஸ்ஸில் அவனும் ஸ்ரீகாந்தும் சரிசமம். வி.வி. ஸ்ரீனிவாசுடன் மராத்தன் போட்டி போல் ஜானா விளையாடுவான். எவ்வளவு தான் தோத்தாலும் வி.வி.ஸ்ரீனிவாஸ் நாளை பார்த்துக்கறேன் என்பான். மறு நாளும் தோத்துத் தான் போவான். ரொம்ப நேரம் விளையாடிக் கொண்டிருந்தால் நாங்கள் கத்துவோம். ஜானா, இதோ ஆச்சு இரண்டு நிமிஷம் என்பான். அது ஆகும் அரை மணி நேரம்.

ஜானாவுடைய தைரியத்திற்கு ரம்பா தியேட்டர் சம்பவத்தை சொல்லலாம். சினிமா பார்த்து விட்டு வந்தவன் காலில் ஆட்டோக் காரன் மோதி விட்டான். செம அடி. கால் பயங்கரமாக வீங்கி விட்டது. ஆனால் அதையும் பொருட்படுத்தாது ஆட்டோக் காரனை மடக்கி விட்டான். அதே ஆட்டோவில் ஏறி டாக்டரிடம் போய்க் கட்டுப் போட்டு விட்டுத் தெருவுக்கு வந்து விட்டான். எல்லா செலவுகளையும் ஆட்டோகாரனே கட்டுமாறு செய்து விட்டான்.

இனறைய அசால்ட் ஆறுமுகத்திற்கெல்லாம் முன்னோடி ஜானா தான். எதிலும் அசால்ட் தான். எதை எடுத்தாலும் முடிச்சுடலாம் என்பான். அவனுடைய முக ஜாடையிலிருந்து காரியம் முடிந்தமாதிரியே தோணும்.

ஜானாவினுடைய highlight help ஊர்வசி தியேட்டர் மற்றும் பாங்க் ஆஃபீஸர். அசால்ட்டாக ஸ்ரீதருக்கு ஆறு மாதம் மெடிக்கல் சர்டிஃபிகேட் வாங்கிக் கொடுத்தான், அவன் கோவாவில் பெரிய ஆளாகும் பொருட்டு. சங்கரன் காலேஜ் படிக்கும் காலத்தில் ஊர்வசி தியேட்டர் கண்ணாடியை உடைத்து மாட்டினான் (தெரியாமல் தான் உடைத்தான் என்று அவனே கூறினான்).  ஜானா தன் FX calculator ஐ அடமானம் வைத்துக் காப்பாற்றினான்.

திருடன் பொருட்டு ஜானா வீட்டு வாசலில் அனைவரும் படுத்தது, அதுவும் சாக்கடைப் பக்கத்தில், அது ஒரு தனி அனுபவம். ஜானா தம்பி க்ருஷ்ணன் சாக்கடையில் மூழ்கத் தெரிந்த போது ஜானா குதித்து அவனைக் காப்பாற்றினான்.

யாருக்கு எந்த உதவி என்றாலும் எப்படியாவது முயற்சி பண்ணி எந்த வழியிலாவது அதை நிறைவேற்றி விடுவான்.

காலேஜ் படிக்கும் சமயத்தில் நடு ராத்திரியில் முன் பணம் போட்டு அனைவரின் பரோட்டா சாப்பிடும் ஆசையை நிறைவேற்றியவன்.

இவ்வளவு அத்தனை பேருக்கும் உதவி (எப்பாடு பட்டாவது) செய்யும் ஜானா, தனக்கென்றால் மிகுந்த நேர்மையைக் கடைபிடிப்பான். AMIE எக்ஸாம் எல்லோரும் காப்பியடிப்பதால் எழுதாமல் வந்து விட்டான். மெடிக்கல் செலவினை முன் கூட்டியே தெரியப் படுத்தாதல் (சின்ன லெட்டர் தான் -மாமனார் எவ்வளவு கெஞ்சியும்) வாங்க மாட்டேன் என்று மறுத்து விட்டான்.

யாருடைய கல்யாணத்தையும் விடாமல் கலந்து கொண்டு விடுவான். ஊட்டியிலிருந்தபோது (அப்போதெல்லாம் ஃபோன் வசதி இல்லை) தகவலைத் தெரிந்து கொண்டு ராஜூ கல்யாணத்திற்கு மதுரைக்கு வந்து விட்டான். அப்படியும் ராஜுவைத் திருப்தி பண்ண முடியவில்லை என்பது தனிக் கதை.

Presence of mind, sense of humor ஜானாவிற்கு அதிகம். யாரும் argument இல் ஜெயிக்க முடியாது.

I.T. Field இல் எல்லோருக்கும் முன்னோடி. அந்த காலத்திலேயே NIIT யில் படித்து விட்டான். இருந்தும் சூழ்நிலை காரணமாக Government postலிலேயே இருந்து விட்டான். ஜானாவிற்கு logical approach இயற்கையிலேயே நிறைய உள்ளது. ஸ்கூல் படிக்கும் காலத்திலேயே மாணிக்கவாசகம் மேத்ஸ் புக்கிலேயே தப்புக் கண்டு பிடித்தவனாயிற்றே அவன்.

ஹோட்டல்களுக்குப் போகும் போது ஒவ்வொருத்தருக்கும் அவன் விரும்பியது வந்து விட்டதா என்று ஜானா பார்த்துக் கொள்வான். வீட்டிற்கு வந்தவர்களைக் கவனிப்பது போல் கவனிப்பான்.

சங்கரன் வேண்டுமென்றே ‘கேட்டது இன்னும் வரவில்லை ஜானா’ என்பான். ‘

இங்க பாருங்க சர்வர், உடனே கொண்டு வாங்க என்று அவசர கதியில் வரவழிப்பான் ஜானா.

50 வயது பூர்த்தி செய்த  ஜானா வாழ்க பல்லாண்டு.

******

4 Replies to “நேதாஜி ரோட் நினைவுகள் – XXII – சில மலரும் நினைவுகள் – ஜானா 50

 1. Yes. Jana came to Madurai in full spirit to attend Raju’s wedding. Satish is a proof to his spirited travel the previous night from Coonoor. Still Raju believes Jana didn’t attend the wedding.

 2. ஜானா என்றைக்குமே ஆபத்பாந்தவன்.
  He has a different approach to any problem.
  ஜானாவை நம்பினோர் கைவிடப்படார்.
  Super சூச்சா

 3. வாழ்த்துக்கள் ஜானா. உன் ஐம்பதாவது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக சுதர்சனம் எழுதிய உன் பெருமைகளை படிக்கும்போது நீ 55 கடந்து விட்டாய்.

  அது வெறும் டிப் ஆஃப் தி ஐஸ்பெர்க் தான். உன் உதவும் குணம்… சான்சே இல்லை.

  நான் கோவா செல்வது ஜானாக்கு உடன்பாடில்லை என்றாலும் எனக்காக ஒரு கவர்மெண்ட் டாக்டர் சர்டிஃபிகேட் அதுவும் ஆறு மாத காலத்திற்கு.
  ஜானா நான் பாத்துக்கறேன்னு சொன்னா 99% முடிந்துவிடும் என்று தெம்பா நாம அடுத்த காரியத்த கவனிக்க போகலாம்.

  செஞ்சத சொல்லி காட்ட மாட்டான். முழு மனசோட பாராட்டுவான்.

  பாக்கிய அவனோட அறுபதாம் கல்யாணத்துல சொல்லறேன் 😀

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)